மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கடுவங்குடியை சேர்ந்த மகேஷ் என்பவர் எலந்தங்குடி VSP மஹால் அருகில் ரூபாய் 15,000 பணத்துடன் பையினை தவறவிட்டார். அதனை கண்டெடுத்த பெரம்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு உரிய நபரிடம் பணப்பையினை ஒப்படைத்தார். காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.