இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹிஷாம் கருணை என்பவர் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்றில் தனது கைப்பையை தவறவிட்டதாக ஹலோ போலீஸ் எண்ணை (8300031100) தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின்படி பரமக்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவு SSI திரு.தாமோதரன், தலைமைக்காவலர் திரு.கோபால் மற்றும் காவலர் திரு.முத்துக்குமார் ஆகியோர் மதுரை சென்று கொண்டிருந்த பேருந்தை பரமக்குடி அருகே நிறுத்தி கைப்பையை மீட்டு சோதனையிட்டதில் ரூபாய் 41,000 பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன.
தொடர்ந்து மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உத்தரவுப்படி, பரமக்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் இராமநாதபுரம் மாவட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா அவர்கள் முன்னிலையில் வைத்து 41.000 பணம் மற்றும் ATM கார்டுகளை உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், விரைந்து செயல்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் பரமக்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவினரின் இச்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS ., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை