திருநெல்வேலி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை பதிவு செய்யும் போது தனது தங்க செயினை தவறவிட்டுள்ளார்.
தவறவிட்ட செயினை கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பணிபுரியும் காவல்துறையினர் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு செய்துங்கநல்லூர் அருகே சென்றதும் செயினை காணவில்லை என அறிந்த ஜெரோம் பெர்னால்டு, கங்கைகொண்டான் சோதனைச் சாவடிக்கு திரும்பி சென்று காவலர்களிடம் செயினை காணவில்லை எனக் கூறினார்.
பின்பு அவரை கங்கைகொண்டான் காவல் நிலையம் வரவழைத்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு தங்க செயினை கல்யாண மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். காவலர்களின் இத்தகைய செயலை ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு மற்றும் கங்கைகொண்டான் ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி வெகுவாக பாராட்டினர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி