சென்னை: தமிழகத்தில் 7 வது கட்ட தளர்வில்லா ஊரடங்கின் 3வது ஞாயிற்றுக்கிழமையில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை உதவியுடன், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு அளிக்கப்பட்டது.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் !
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
என்னும் பாடல் வரிக்கு ஏற்ப, ஊரடங்கு அறிவித்த நாள் முதல் ஆதரவற்றோருக்கு ஆதரவாக நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு, முககவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
சென்னைக்குட்பட்ட போரூர் ராமச்சந்திரா, ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, பூந்தமல்லி, பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் 750 நபர்களுக்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் சாதம், தண்ணீர் பாட்டில்களுடன், முக கவசங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக போரூர் SRMC சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.சங்கரநாராயணன், கலந்து கொண்டார். போரூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.நாதன் அவர்கள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.பகவதி பெருமாள் அவர்கள், பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் அவர்கள், திரு.சந்திரமோகன் அவர்கள், திரு.சுந்தரராஜன் அவர்கள், திரு.மோகனகிருஷ்ணன் அவர்கள், ஆகியோர் முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தின் முன்னணியில் கடமையைச் செவ்வனே செய்து வரும் காவல்துறையினரின் பணி போற்றுதலுக்குரியது. நம் உயிர் காக்க, தன் உயிரை பணயம் வைத்து காவல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடிய நோய் தொற்று நேரத்தில் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மனித உயிர்களை காக்க போராடுபவர்கள் நம் காவலர்கள். நேற்று ஆதரவற்றோருரை தேடி சென்று உணவு வழங்க மேற்குறிப்பிட்ட காவல்துறையினர் உதவி புரிந்தனர் என்பது குறிப்பிடதக்கது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
காவல்துறையினர் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் மக்களை தகுந்த சமூக இடைவெளி கடைபிடிக்க செய்து, முககவசம் அணிய வைத்து, கைகளை சுத்தம் செய்ய, கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கி, பின் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் சொல்லிற்கிணங்க, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
கொரானா பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள நிலையில், பெரும்பாலும் ஒவ்வொருவரும், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வரும் சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினரின் செயல் பாராட்டுதலுக்குரியது.