மதுரை : மதுரை அருகே ஓய்வுபெற்ற தலையாரி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே களிமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி 65 இவர் ஓய்வு பெற்ற தலையாரி அவரது மனைவி மூக்கம்மாள்.இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டுபின்னர் திரும்பி வந்து பார்த்தபோது முத்துச்சாமி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முத்துசாமி பரிதாபமாக உயிர் இழந்தார் இவரது சாவு குறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி