காஞ்சி: காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 1) தாமோதரன் (21) , தந்தை பெரியார் தெரு, பழைய இரயில்வே நிலையம் அருகில், காஞ்சிபுரம் மற்றும் 2) தர்மன் (எ) தர்மதுரை 20 , அன்னை சத்யா நகர், திருக்காலிமேடு, காஞ்சிபுரம் ஆகிய இருவரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்து
வந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.M.சுதாகர் , அவர்கள் மேற்படி தலைமறைவு குற்றவாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டதின்பேரில் காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.ராஜகோபால் அவர்கள் தலைமையிலான குழு
விரைவாக செயல்பட்டு குற்றவாளிகள் தாமோதரன் மற்றும் தர்மா (எ) தர்மதுரை ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .