இராணிபேட்டை : இராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மருத்துவர் திருமதி.தீபா சத்யன், மற்றும் அரக்கோணம் உட்கோட்ட ASP அவர்களின் உத்தரவின் பேரில்
அரக்கோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு நா.பழனிவேல், அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, மற்றும் போலீசார் சகிதம் கடந்த ஏழு மாதங்களாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்துக்குட்பட்ட வேலூர் பேட்டையை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை அரக்கோணம் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிக்கும் போது
1 1/2 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இவர் இரண்டு கொலை வழக்கு, நான்கு கொலை முயற்சி மற்றும் போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஆவார். தற்போது இவர் கடந்த ஏழு மாதங்கள் தலைமறைவாக இருந்தவர் ஆய்வாளர் திரு.பழனிவேல், உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்தபோது ரகசிய தகவலின் பெயரில் அருகில் பாடி பேருந்து நிறுத்தம் இடம் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் கஞ்சா என்னும் போதை பொருள் வைத்துக் கொண்டு இருந்தவரை கையும் களவுமாக பிடிபட்டார்.. அப்போது அவருடன் மேற்படி கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சங்கீத் வயது (19), ஆகிய என்பவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நிலைய குற்ற எண் 358 /22 u/s 8(c) r/w 20(b)(ii)(B) NDPS Act வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்