காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies) மீது நடவடிக்கை மேற்கொள்ள
அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி , அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 1)விஷ்வநாதன் (எ) குள்ள விஷ்வா 31,, கிளாய் கிராமம், திருப்பெரும்புதூர் தாலுக்கா மற்றும் அவனது கூட்டாளிகள் 2) முருகன் 35, VRP.சத்திரம், திருப்பெரும்புதூர் 3) கிருபாகரன் 17 ,
பள்ளிக்கூடம் தெரு, குண்டு பெரும்பேடு, திருப்பெரும்புதூர் ஆகியோர்களும், அதேபோல் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி 4) சந்தோஷ் (எ) சந்தோஷ் குமார் 26, சின்ன காஞ்சிபுரம் ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு
பல்வேறு குற்றச் செயலகளில் ஈடுபட்டவர்களை திருப்பெரும்புதூர், மணிமங்கலம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு மேற்படி நால்வரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .Dr திரு.M.சுதாகர் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் எவராயினும் சட்டத்தின் வாயிலாக இரும்புகரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என தெரிவித்தார்