திருவள்ளூர் : 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி ஆவடி மாநகரம், பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண்.628/2000 ச.பி.341, 392, 394 r/w 397 இ.த.ச. வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து வந்த டேவிட்பினு என்பவரை கடந்த 23 ஆண்டுகளாக பல தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தற்போது பூந்தமல்லி குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. K. தினகரன், HC 13258 திரு.M.D.K.சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி டேவிட்பினு தனது பெயரை சசி (எ) காநாடு சசி என்று மாற்றி திருட்டு வழக்கில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரா சிறையில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, குற்றவாளியை கைது செய்த கேரள மாநிலம் கொட்டாரக்கரா காவல் நிலையம் சென்று குற்ற எண்.435/2023 ச/பி.151 CrPC @ 379 IPC-ல் குற்றவாளி சம்மந்தப்பட்ட வழக்கில் குற்றவாளியின் கைரேகை, அங்கமச்ச அடையாளங்களை பெற்று சென்னை வந்து பூந்தமல்லி காவல் நிலைய வழக்கின் கோப்பில் உள்ள அவரது கைரேகை மற்றும் அங்கமச்ச அடையாளங்களை ஆய்வு செய்ததில் மேற்படி நபர் டேவிட்பினு என்பது உறுதியானதால், பூந்தமல்லி மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் நீதிமன்ற நீதிபதி அவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து பிடியாணை பெற்று கேரள மாநிலம் கொட்டாரக்கரா சிறைக்கு சென்று குற்றவாளி மீதான பிடியாணையை நிறைவேற்றி (20.09.2023)-ம் தேதி அன்று பூந்தமல்லி மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன்பாக ஆஜர் செய்யப்பட்டார்.தனிப்படைகளின் தொடர் முயற்சியால் எதிரி டேவிட்பினு கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனிப்படையினரை 07.11.2023-ம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.