சென்னை: சென்னை மணலி போக்குவரத்து காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார் குப்பம் சந்திப்பில் மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு.மலைச்சாமி
தலைமையில் , மணலி போக்குவரத்து காவல் சரக ஆய்வாளர் திரு.சிவகுமார்
முன்னிலையில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் மணலி கண்ணியம்மன்பேட்டை கிராமத்தை சார்ந்த சமூக ஆர்வளர் ஜெகன் சார்பில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் திரு.அழகேசன், போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை