தற்கொலை இப்பொழுது கொடிய நோயாக பரவி வருகிறது. ஒவ்வொரு 3 நொடிக்கும் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் என்று உலக சுகாதார அமைப்பு தற்கொலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஒவ்வொரு 3 விநாடிகளிலும் ஒருவர் உலகில் எங்காவது ஒரு நபர் தங்களை தற்கொலைக்கு முயற்சிக்கிறார், ஒவ்வொரு 40 நொடிகளுக்குள் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 000 பேர் தற்கொலை காரணமாக இறக்கின்றனர், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், அவர்களில் 1/3 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
தற்போது காவல்துறையிலும் காவலர்கள் தற்கொலைகள் அதிகரித்து கொண்டு போவதும் வேதனைக்குரியது.
மக்கள் இதை ஏன் செய்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் மனதளவில் பலவீனமானவர்களா? அல்லது அவர்களால் சூழ்நிலைகளைத் தாங்குவது மிகவும் கடினமா? அவர்கள் இனி வாழ்க்கையை எதிர்கொள்ள விரும்பவில்லை, சுலபமான பாதையை எடுக்க விரும்புகிறார்களா? இந்த தலைப்பில் இன்று (20 நவம்பர்) மாலை 7 மணியளலில் ஆன்லைன் கருத்தரங்கில் தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.எஸ். டேவிட்சன் தேவசிர்வதம்,IPS கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
தற்போது காவல்துறையிலும் காவலர்கள் தற்கொலைகள் அதிகரித்து கொண்டு போவதும் வேதனைக்குரியது. மனஅழுத்தத்தில் உள்ள காவலர்களும் இவ்விணைய கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள கீழ்காணும் செயலி இணைப்பை பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85145834837…
Meeting ID: 851 4583 4837
Passcode: 123
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா