குடியாத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களான தெய்வசிகாமணி அவரின் மனைவி காமாட்சி ஆகியோர் மகன் சோறு போடவில்லை என கோபித்து வீட்டை விட்டு குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவரை குடியாத்தம் தாலுகா உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள், முதியவர்களை மீட்டு நாங்களும் உங்கள் பிள்ளைகள் எனவும் உங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். குடியாத்தம் நகர உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் Wgr-1 3245 திருமதி கிரிஜா மற்றும் Wgr-1 2447 திருமதி கற்பகம், ஆகியோர் முதியோர்களிடம் மனதை உருக்கும் வகையில் பேசி பட்டினியால் வாடி இருந்த முதியவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தனர். பின்பு மனம் விட்டு பேசிய முதியவர்களிடம் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என குடியாத்தம் நகர காவல் துறையினர் பொறுமையாக எடுத்துரைத்தனர். இந்த மனிதநேயமிக்க செயலை செய்த குடியாத்தம் நகர காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மனதார பாராட்டினர். மேலும் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்