திருச்சி: திருச்சி மாவட்டம், 06.02.2022 அன்று வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தெற்கு சித்தாம்பூர் என்ற இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக கூறியதாக அவ்வூர் மக்கள் வாத்தலை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.
இதனை அறிந்த வாத்தலை காவல் உதவி ஆய்வாளர், திரு. செபஸ்டியன் சந்தியாகு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு விசாரித்தார். விசாரணையில் அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தெரியவந்தது. இதனை அறிந்த காவல் உதவி ஆய்வாளர் அப்பெண்ணின் குடும்பத்தினரை கண்டுபிடித்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்