தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் கிராமத்தில் கணவரை இழந்து தவித்த வந்த பெண்மணி ஒருவர் முல்லை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை கண்ட மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரித்ததில் தனது மகன் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானதால் இந்த முடிவுக்கு வந்தேன் என்றார்.
தாயின் அழுகை குமுறலை கேட்டறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்கள் அப்பெண்ணின் மகனிற்கு தக்க அறிவுரை வழங்கி காவல்துறை சார்பில் ரூ.7000 பெண்மணியிடம் வழங்கினர். பின்பு காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகராஜேஸ்வரி அவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வரும் வகையில் சமையல் வேலை ஒன்றை ஏற்பாடு செய்தும்¸ அரசு வழங்கும் விதவை தொகை அந்த பெண்மணிக்கு சேர வழிவகையும் செய்து கொடுத்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி