ராணிப்பேட்டை : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பொதுமக்களுக்கும் காவல் துறைக்கு மன நல்லுறவை மேம்படுத்தும் பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்து சமூக காவலில் ஈடுபட்டு, குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு ரோந்து அமைப்பு, கிராமிய விழிப்புணர்வு குழுக்கள், ரோந்து கண்காணிப்பு மின் அமைப்பு நாங்கள் உங்களுக்காக, உடலில் அணியும் கேமரா வசதி, உட்பட நவீன மயமாக்கப்பட்ட பிரத்தியேக ரோந்து அமைப்புகள் கடந்த வருடம் துவங்கப்பட்டது. இந்த ஆண்டில் கருடா சிறப்பு ரோந்து முறை, சேர்வோம் எழுவோம், சிந்திப்போம் சிறப்பும் என பல முன்னெடுப்புகள் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தோடு ஒரு வாழ்வு ஒரு அழைப்பு என்ற முறையை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்தியன் ஐபிஎஸ் அவர்களால் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரு. முத்துக்கருப்பன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ccw, ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. எம். பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சமூக காவல் திட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் அவர்கள் கூறியதாவது ராணிப்பேட்டை மாவட்ட மாவட்டத்தை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கோடு ஈடுபடுவதாகவும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் மனம் உடைந்து விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் தற்கொலை மூலமாக போகக்கூடாது என்று அவர் தெரிவித்தார். மேலும் மன அழுத்தம் பிரச்சனைகளால் தற்கொலைக்கு முயலும் எண்ணம் தோன்றும் அவர்களுக்கு தகுந்த நிபுணர்கள் மூலம் ஆறுதலும் ஆலோசனைகளும் வழங்கி அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு தன்னம்பிக்கை மேற்கொள்ளும் தன்னம்பிக்கை மேற்கொள்ளவும் உதவும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இரண்டு உதவி எண்கள் தூண்டுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்