தர்மபுரி : தர்மபுரி மாவட்டகாவல்_கண்காணிப்பாளர் திரு.ப. இராஜன் MA BL அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பாலக்கோடு உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் அனைவருக்கும் கைதிகளை கைது செய்வது தொடர்பாகவும், அவர்களை போலீஸ் காவலில் வைப்பது தொடர்பாகவும், கைது தொடர்பாக காவல் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாகவும்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவரமாக அறிவுரை வழங்கினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் மற்றும் பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டனர்.