அவர்கள் தலைமையில் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (ஆண்கள்). சைபர் குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும் ஒமைக்ரான் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது , செல்போன்களை தங்களது நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்திய அறிவுறுத்தியும் இணைய வழியில் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எடுத்துரைத்து படிக்கின்ற காலத்தில் தங்களது கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதேபோல் மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது எனவும் இதனால் தங்களது எதிர்காலம் பாதிப்படையும் தங்களை நம்பியிருக்கின்ற பெற்றோர்களின் கனவு சிதைந்து விடும் என்று தெளிவுபடுத்தி தற்போது கொரோனா(ஒமிக்ரான்) அதிகளவில் பரவிவரும் சூழலில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சைபர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.இரகு மற்றும் திருமதி.சரண்யா அவர்கள் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.