இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழா தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.திவ்யதர்ஷினி .இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இகா.ப., ஆகியோர் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் நற்சான்று வழங்கப்பட்டது.