தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீஸ் எஸ்ஐ உட்பட 16 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு.பாரூக், மதுவிலக்கு பிரிவுக்கும்,
கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு.பாஸ்கர் கோபிநத்தம்பட்டிக்கும்,
கோபிநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு.துரை, பென்னாகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து, ஒகேனக்கல்லுக்கும், உதவி ஆய்வாளர் திரு.ஜெய்க்வாட் கம்பைநல்லூரிலிருந்து நீலகிரிக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முனிராஜ் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் ஏட்டு திரு.ராஜலிங்கம் கம்பைநல்லூர் இருந்து கோவை மாவட்டத்திற்க்கும், திரு.பன்னீர் என்ற இண்டூரிலிருந்து ஏரியூருக்கும், திரு.குயில்தாசன் அரூரில் இருந்து பெரும்பாலைக்கும், திரு.சக்தி பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து மகேந்திரமங்கலத்திற்கும், திரு.முனுசாமி பெரும்பாலையிலிருந்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜன் தெரிவித்துள்ளதார்.