தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவர்களை சோதனை சாவடிகளில் இருந்து செட்டி கரையில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி தனிமைப்படுத்த வேண்டும்.
மேலும் கண்காணிக்க 50 பேர் கொண்ட குழு அமைத்து கிராம ஊராட்சிகளில் பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும், இ- பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனங்களில் வருவோரை நடந்து வருவோரை கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.