தருமபுரி: சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரதீப்குமார், ஐ.பி.எஸ் அவர்கள் தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அ பள்ளிப்பட்டி மற்றும் அரூர் காவல் நிலையங்களை ஆய்வு செய்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். மேலும் நகரத்தின் முக்கிய இடங்களில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார். ஐ.பி.எஸ்,. மற்றும் அரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.தமிழ்மணி அவர்கள் ஆகியோர் இருந்தனர்.