தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து மாரண்டஹள்ளி வழியாக காரில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாரண்டஹள்ளி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வெள்ளிசந்தை அருகே கடந்த 26.07.2024 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் காரில் சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் டிரைவர் மற்றும் உடன் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து காரில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 86 ஆயிரம் மதிப்பிலான 111 கிலோ குட்கா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்