தருமபுரி: தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்து மாணவிகளுக்கு குறும்படம் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் ஆன்லைன் வகுப்பு சம்பந்தமாக மாணவிகள் தற்போது செல்போன் அதிகம் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதன் பிறகு சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சரண்யா அவர்கள் இணைய வழியில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் அளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிதி மோசடி தொடர்பாக அழைக்க வேண்டிய தேசிய இலவச எண் 155260 குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி.சிவகாமி சமூகநலத்துறை அலுவலர்கள் திருமதி.ஆனந்தி ,திரு.ஜெயசீலன், திரு.சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இம்முகாமில் சுமார் 200 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.