திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி இருக்கும் 14 கிமீ தூரம் கிரிவலம் செல்வது வழக்கம், இந்த கிரி வல பாதையில் எம லிங்கம், இந்திர லிங்கம், அக்கினி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட லிங்கம் அமைந்துள்ளது.
இதில் 7 வது லிங்கமான குபேர லிங்கத்தினை கார்த்திகை சிவ ராத்திரி அன்று வணங்கி பின்னர் கிரிவலம் வந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே சில ஆண்டு காலமாக வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து லட்ச கணக்கான மக்கள் திருவண்ணாமலை வந்து கிரிவலம் செல்லுவார்கள்.
இந்த ஆண்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் குபேர கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. எனவே கிரிவலம் செல்லும் பாதையில் போலீசார் பேரி கார்டு வைத்து தடுப்பு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி கிரிவலம் வந்த பக்தர்கள் குறுக்கு பாதை வழியே சென்றனர். மேலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கோவில் நிர்வாகமம் குபேர தரிசணம் செய்ய முடியாத வகையில் தடுப்பு அமைத்து இருந்தனர். தீப திருவிழா நாளிலும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கவில்லை. தற்போது குபேர கிரிவலம் செல்லவும் தடை விதித்து உள்ளதால் பக்தர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்