கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் காவல் நிலைய பகுதியில் வடிவேல் என்பவர் கிருஷ்ணகிரியில் வேல் என்ற பெயரில் தனியார் லோக்கல் டிவி சேனல் நடத்தி வருவதாகவும் வரட்டம்பட்டி கிராமத்தில் விநாயகா என்ற பெயரில் கிரானைட் கம்பெனி வைத்தும் தொழில் செய்து வருவதாகவும் கடந்த சுமார் 1 1/2 வருடங்களாக கிரானைட் கம்பெனி நடத்தாமல் பூட்டு போட்டு மூடி இருந்து வந்த நிலையில், (27.08.2023) ஆம் தேதி இரவு 20.00 மணிக்கு வடிவேல் கிரானைட் கம்பெனிக்கு சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும் அதன் பின்னர் (28.08.2023) ஆம் தேதி காலை சுமார் 9.00 மணிக்கு வடிவேல் கிரானைட் கம்பெனிக்கு சென்று பார்த்த போது கம்பெனியில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததாகவும் உள்ளே சென்று பார்த்த போது கம்பெனியில் இருந்த UG கேபிள் 50 அடி, தரக சீட்டு 35, இரும்பு சானல் 2, கம்ப்ரஸர் 1, மின் மோட்டார் 3 ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டதாக வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் காவேரிபட்டனம் காவல் துறையினர் விசாரித்து 31.08.2023 ஆம் தேதி திருடிய நபரை கைது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்