கோவை: கோவை துடியலூர் பக்கமுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் வேணுகோபால் ( வயது 35) சிவப்பிரகாசம் (வயது 33 ) இவர்களில் வேணுகோபால் டிரைவராகவும், சிவப்பிரகாஷ் லேத் டர்னராகவும் வேலை பார்த்து வந்தனர்.
சொத்து தகராறு காரணமாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அண்ணன் வேணுகோபால் அவரது தம்பி சிவப்பிரகாசை கத்தியால் குத்தினார் .இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து அண்ணன் வேணுகோபால் கைது செய்தார்.