தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். 8.5.1968ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். பிஏ (எகனாமிக்ஸ்), எம்ஏ (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். நாளையே புதிதாக தற்காலிக டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. மேலும் முதல்வர் வருகிற 30ம் தேதி வெளிநாடு செல்கிறார். இதனால் அதற்கு முன்னதாக அதாவது 29ம் தேதி புதிய டிஜிபி பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி