தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே ரோந்து கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்கள் சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் 49. என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நபரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.