சேலம்: சேலம் மாநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 30-டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
சேலம் உட்பட தமிழகத்தில் பணியாற்றி வந்த 30 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. திரு.சரவணன், சேலம் மாநகர நுண்ணறிவுப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிவந்த உதவி ஆணையர் திரு..பூபதிராஜன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிவந்த உதவி ஆணையர் திரு.சின்னசாமி, சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் பொருளாதார குற்றப்பிரிவு நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் திரு.செல்வராஜ், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி டவுன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிவந்த திரு.அண்ணாதுரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கும், விழுப்புரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிவந்த திரு.பழனிசாமி, நாமக்கல் சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. திரு.விஜயராகவன், கிருஷ்ணகிரி டவுனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டி.எஸ்.பி. திரு.வினோத், தர்மபுரி டவுனுக்கும், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. திரு.பார்த்திபன், விழுப்புரம் டவுனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 30 டி.எஸ்.பி., உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.