தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர் திரு.சரவணன் அவர்கள் மலைவாழ் மக்களையும் சந்தித்து பேசினார். அப்பொழுது 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் எனது உடம்பில் போதுமான இரத்தம் இல்லை, எனது உடம்பு மிகவும் சோர்வாக உள்ளது ஏதேனும் உதவி கிடைக்குமா சார் என கேட்ட போது சற்றும் தாமதிக்காமல் உடனே ஒரு ஆட்டோவில் அப்பெண்மணியை ஏற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் சேர்த்தார். இதனையடுத்து அப்பெண்ணிற்கு O-positive இரத்தம் வேண்டும் என மருத்துவர்கள் கூறியதன் பேரில் உடனடியாக தனது நண்பரை வரவழைத்து இரத்தம் பெற்று அப்பெண்ணிற்கு உதவினார். அந்த கர்ப்பிணி பெண் முழு சிகிச்சை பெற்று உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதை அறிந்ததும் தலைமைக் காவலர் மன மகிழ்ந்தார். கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவிய தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தனர்.
உதிரம் கொடுத்து உயிரைக் காத்த திருநெல்வேலி மாவட்ட உதவி ஆய்வாளர்.