சென்னை: கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் வருமானம் இல்லாமல், குடும்பத்துடன் உணவு இல்லாத சூழ்நிலை உருவானதால் வறுமையில் பல தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.
அவசரநிலை பிரகடனம் 144 ஊரடங்கு உத்தரவு முதல் நாள் முதல் இன்று வரை நமது சமூக சேவை தொடர்கிறது. உதவும் உள்ளங்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாம் செய்யும் நல்ல காரியங்களை அறிந்து தானே முன்வந்து நமது நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு அசோக் சாபத் அவர்களிடம் நன்கொடை அளித்தது பாராட்டுக்குரியது. உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு, கருணை உள்ளத்தோடு, முன்வந்து உதவி செய்த நமது தமிழக டிஜிபி திரு. ஜே. கே. திரிபாதியின் மனைவி திருமதி. செல்வி அனுஜா அவர்களுக்கு நமது போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திரு.அ.சார்லஸ் அவர்களும் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். தமிழக டிஜிபி திரு. ஜே. கே. திரிபாதியின் மனைவி திருமதி. செல்வி அனுஜா அவர்கள் அளித்துள்ள நன்கொடையிலிருந்து 70 குடும்பங்களுக்கு, 1 வாரத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அளிக்கப்பபட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து விவேகானந்த வித்யாலயா சேவ பாரதி வாயிலாக ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் கிண்டி, தரமணி, பம்மல் பகுதியை சேர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கும் மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கும் மளிகை பொருட்கள் நன்கொடைகள் வழங்கப்பட்டது. மேலும், நம்முடன் இணைந்து செயல்பட்டு வரும் லயன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.