திருவாரூர்: தற்போது பொதுமக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அபரிதமான வளர்ச்சியடைந்து
வருகின்றது. இந்த அபரிதமான வளா்ச்சியினால் இணைய வழி குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்ற புதிய யுக்திகளை கையாளுகின்றனா். ஏர்டெல் KYC சேவை என்ற போர்வையில், பொதுமக்களிடம் இருந்து வங்கி விவரங்களையும் சேகரித்து மோசடி நடத்திவருகின்றனா்.
சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்:
1. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரி போன்று போன் அல்லது குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளரின் KYC முழுமையாக இல்லை என கூறி “Airtel Quick Support” என்ற செயலியினை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துகின்றனா்.
“Airtel Quick Support” செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதில்லை. எனவே சேவை மைய அதிகாரி ”Team Viewer Quick Support” செயலியினை பயன்படுத்த கூறுகின்றார்.
2. இந்த “Team Viewer Quick Support” இணையவழி குற்றவாளிகள், வாடிக்கையாளரின் கைபேசியில் உள்ள அனைத்து கணக்குகளையும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது.
3. பின்னா் இணைய குற்றவாளிகள் வாடிக்கையாளரின் வங்கி எண் மற்றும் MPIN போன்ற விவரங்களை கேட்டு அதனை பயன்படுத்தி வாடிக்கையாளரின் வங்கி சேவையினை பயன்படுத்தி கொள்கின்றனா்.
4. மேலும் வாடிக்கையாளருக்கு மிக குறைந்த விலையில் VIP எண் வழங்குவதாக போன் அல்லது குறுஞ்செய்தி மூலமாக ஆசை வார்த்தை கூறி அந்த எண் பெற முன் தொகை அளிக்குமாறு கேட்டு பெற்று ஏமாற்றுகின்றனா்.
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் :
1. தங்களது தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண், இணைய வங்கி பயனா் எண், கடவுச்சொல், OTP மற்றும் IFSC எண் போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.
2. வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரி என கூறி யார் அனுப்பும் இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம்.
3. தங்களது mPIN, Credit Card PIN number, CVV மற்றும் Net banking கடவுச்சொல் போன்றவற்றை உங்களது கைபேசியில் தெடா்பு எண்களாக சேமிக்க வேண்டாம்.
4. UPI பயன்படுத்தி தொலைத்தொடா்பு நிறுவனம், வங்கி மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளா் சேவை பணியாளா்களுக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.
5. எந்த தொலைத்தொடா்பு நிறுவனமும் தங்களது eKYC விவரங்கள், ஆதார் எண் போன்ற விவரங்களையும் எந்த ஒரு செயலியையும் பதிவிறக்க செய்யவும் வலியுறுத்தாது. தங்களுக்கு மேற்குறிப்பிட்டது போன்று அறிவுறுத்தி அழைப்பு வந்தால் எச்சரிக்கையாக செயல்படவும்.
6. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) பயனர்களுக்கு கோபுரங்களை நிறுவுவதற்கு NOC வழங்குவதாக கடிதத்துடன் அணுகுபவா்களை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது.
7. இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் அல்லது 155260 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் அளிக்கவும்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா