கோவை: கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.முத்துசாமி,IPS கோவை மாவட்ட சிறைத்துறை துணைத் தலைவர், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நேற்று (26.07.2021) ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை மாவட்டக் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கப்பட்டது.
கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 நபர்களில் 372 நபர்கள் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி,கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் சரிபார்த்து கோவை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இவ்உடற்தகுதி தேர்விற்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 300 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்















