திண்டுக்கல்: தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14- வது பட்டாலியன் பழனிக்கு வருகை தந்தார். திரு.அபய் குமார் சிங் இ.கா.ப, (கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆயுதப்படை சென்னை) அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு. டாக்டர் என். கண்ணன் இ.கா.ப, (காவல்துறைத் தலைவர் ஆயுதப்படை சென்னை), அவர்களால் புதிய கைபந்து மைதானம், இருசக்கர வாகனம் நிருத்தும் இடம், மற்றும் கூடைப்பந்துதளம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மற்றும் புதிய காய்கறி கடை திறக்கப்பட்டது. மாதாந்திரத் தேர்வுகளில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு மற்றும் டாப்பர் RPC களுக்கு IGP/APபாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்கள். BN தலைமையகத்தில், 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. பழனி கோகுலம் இல்லத்தில் தங்கியுள்ள அறிவுசார் ஊனமுற்றோருக்கு, இலவச உணவு விநியோகம் வழங்கபட்டது.
