தேனி : தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் அவர்கள் தலைமையில் சென்னை தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக மன அழுத்த மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் காவலர்கள் பொதுமக்களிடம் அணுகுமுறை,காவல் நிலைய பணிகளை சட்டப்படி அணுகுமுறை, கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியின் போது காவல்துறையினர் தங்களை முன்னெச்சரிக்கையுடன் தற்காத்துக் கொண்டு காவல் பணி செய்வது எப்படி, பொதுமக்களிடமிருந்து வரும் புகார் மனுக்களை விரைந்து நடவடிக்கை எடுப்பது, வாகன சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொது மக்களின் நிறை,குறைகளை கேட்டறிந்து காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை அனைவரின் மத்தியிலும் நிரூபிக்கும் வகையில் காவலர்களின் செயல்பாடு அமைய வேண்டும் மற்றும் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த யோகா பயிற்சிகள் மன அழுத்தத்தை கையாளும் முறை உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.