தமிழ்நாடு காவல் துறை சங்க தலைவர் திரு.சிவகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு விழாவில் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சங்கத்தின் வழக்கறிஞர் திரு. மது பிரகாஷ் அவர்களுடன், காவல்துறை சங்கத்தின் நிர்வாகி, ஓய்வு பெற்ற காவலர் திரு. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்கத்தின் அங்கீகாரம் கேட்டு தொடர்ந்து போராடிய உதவி ஆய்வாளர் திரு. “கு.சிவகுமார்” திடீர்மாரடைப்பால் கடந்த ஆண்டு இதே நாளில் காலமானார். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர் திரு.சிவகுமார்.
இவர் காவல்துறையினருக்கு ஒரு சங்கம் வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தார் அதற்காக அவர் பல இடையூறுகளையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
1975ன் 27-வது சட்டம் பதிவு எண்.212/2001 தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து காவலர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அதன் பிறகு சுமார் 18 வருடங்களாக சங்கத்தின் அங்கீகாரம் கேட்டு கிட்டத்தட்ட இரண்டு மூன்று முறை டிஜிபி அவர்களையும் சந்தித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து நடத்தி வந்தார். டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்தார். எப்படியாவது இந்த சங்கத்தின் அங்கீகாரம் பெற்று காவல்துறையினருக்கு பக்க பலமாக செயல் படலாம் என பாடுபட்டு வந்தார். சிவகுமாா் உயிரிழப்பு தமிழக காவல்துறையில் பணியாற்றும் கீழ்நிலை காவலர்களுக்குமிகப்பெரிய இழப்பு என அப்போது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.