சென்னை : கொரோனா ஊரடங்கால் சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர் பெரம்பை சண்முகம் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் சைதை சந்துரு மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிஷாந்த் குமார், சட்ட ஆலோசகர் கதிரேசன் பி ஏ பி எல் உடன் சைதை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் புகழேந்தி அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல்துறை கிண்டி சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி அவர்கள் மற்றும் உடன் பணிபுரியும் போலீசாருக்கு நோய்த் தடுப்பு பணியில் பாதுகாப்பாக பணிபுரிய ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான சனிடைசர், கையுறை, மற்றும் n95 மாஸ்க் ஆகிய நோய் தடுப்பு சாதனங்களை தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர் பெரம்பை சண்முகம் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் சைதை சந்துரு அவர்கள் வழங்கினார் உடன் மாநில துணைப் பொதுச் செயலாளர் நிஷாந்த் குமார் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கதிரேசன் பி ஏ பி எல் உடனிருந்தனர்.
சென்னை பெருநகர காவல்துறை சைதாப்பேட்டை காவல் சரகம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தி அவர்கள் மற்றும் உடன் பணிபுரியும் போலீசாருக்கு நோய் தடுப்பு பணியில் பாதுகாப்பாக பணிபுரிய ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான சனிடைசர் கையுறை , மற்றும் n95 மாஸ்க்குகளை தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பின் சார்பில் நிறுவனர் பெரம்பை சண்முகம் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் சைதை சந்துரு அவர்கள் வழங்கினார் உடன் துணைப் பொதுச் செயலாளர் நிஷாந்த் குமார் மற்றும் சட்ட ஆலோசகர் கதிரேசன் பி ஏ பி எல் உடன் இருந்தார்.
சென்னை பெருநகர காவல்துறை அசோக் நகர் காவல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர் தினகரன் அவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நோய்த்தடுப்பு பணியில் பாதுகாப்பாக பணிபுரிய ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான சனிடைசர் கையுறை மற்றும் என் 95 மாஸ்க் ஆகிய நோய் தடுப்பு சாதனங்களை தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர் பெரம்பை சண்முகம் முன்னிலையில் மாநில துணை தலைவர் சைதை சந்துரு அவர்கள் வழங்கினார் உடன் மாநில துணை பொதுச்செயலாளர் நிஷாந்த் குமார் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கதிரேசன் உடன் இருந்தனர்.