திருவள்ளூர் : பொன்னேரி, ஏப். 30 ,பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பரவி வருகிறது. பாடம் எடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவதும், ஆசிரியர்கள் முன்பு மாணவர்கள் குத்தாட்டம் போடுவது, வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கும் பெஞ்சுகளை உடைப்பதும், பள்ளியில் படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதும் , அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இதனால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் ஆசிரியர்களை மன அழுத்தத்திற்கும் , மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இதனைப் போக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு, பாட வேளையில் ஒரு பாடவேளை மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பு மற்றும், தீய வழியில் செல்லாமலும் போதைப் பொருளுக்கு அடிமையாகாமலும் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எனவும் மாணவர்களின் சீருடை சரியான, முறையில் அணிய வேண்டும் என்றும். மாணவர்களின் சிகை அலங்காரம் சரியான முறையில் வெட்டப்பட வேண்டும் என்றும். அப்படி சரியான முறையில் நடந்து கொள்ளாத, மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும். ஆசிரியர்கள் மன உளைச்சல் இல்லாமல் ஆசிரியர்பணியை, மேற்கொள்ள பணிப் பாதுகாப்பை வழங்க வேண்டும். என டாக்டர் திரு. இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ, உயர்மட்ட குழு உறுப்பினர். திரு. காத்தவராயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திக