சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு…
-
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம்
-
மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது
-
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்
-
ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன
-
சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை
-
2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்
-
தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி
-
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
-
உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு
-
தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு
-
அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு
-
மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி