கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையிட்டனர். தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் சுற்றிலும் உப்பு மூடையும், அதன் நடுவே 15 டன், 400 கிலோ அளவிலான ரேஷன் அரிசியும் அடுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியுடன்இ அரிசி மூடைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் கேரளாவுக்கு கடத்த முயன்றதாக கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாத்தை கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்