திருவாரூர்: திருவாரூர் மாவட்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்து காவல் பணிக்கு வரவேற்பு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் 2020-ம் ஆண்டிற்கான (ஆண்/பெண்) இரண்டாம்
நிலைக்காவலர், சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பு மீட்புக்குழு வீரர் பணிகளுக்கான தேர்வினை நடத்திவருகிறது. தேர்வின் முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு முடிவுற்றநிலையில் அதில் தேர்வான தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித்தேர்வு எதிர்வரும் 26.07.21 முதல் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தினைச்சேர்ந்த திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் (ஆண்/பெண்) பலர் நடந்துமுடிந்த எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்று உடற்தகுதித்தேர்வில் பங்குபெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உடற்பயிற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்பணியில் தன்னை அர்ப்பணித்து தமிழக காவல்துறையில் சேவை செய்ய துடிப்பு,ஆர்வம் கொண்ட மேற்படி இளைஞர்களை தனது தினசரி நடைபயிற்சியின்போது கவனித்துவந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அத்தகைய
இளைஞர்களை உற்சாகப்படுத்தி, பாராட்டி ஊக்கமளிக்க முடிவுசெய்தார்கள். அதன் அடிப்படையில் பயிற்சியில் ஈடுபட்டுவந்த
200-க்கும் மேற்பட்ட மேற்படி இளைஞர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று (23.07.21) காலை 07.30 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரில் சந்தித்து அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடி தமிழக காவல்துறையின் சிறப்பு காவல் பணியின் கடினம்,கட்டமைப்பு கடமை,கண்ணியம் கட்டுப்பாடு குறித்து விவரித்தார்கள்.
மேலும் உடற்தகுதி தேர்வில் பங்குபெறுவது குறித்தும்,அதில் செய்ய வேண்டியது செய்யக்கூடாதது குறித்தும், வெற்றி மற்றும் தோல்வியை எதிர்கொள்வது குறித்தும் உற்சாக உரையாற்றி அனைவரையும் நெகிழ வைத்தார்கள் .
மேலும் நடைபெறவுள்ள உடற்தகுதிதேர்வில் அனைவரும் வெற்றிபெற்று காக்கி சீருடை அணிந்து தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமைத் தேடித்தருமாறு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
வட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய பாராட்டு,ஊக்கம் மற்றும் வாழ்த்துகள் அனைத்தும் காவல்பணியில் புதிதாக சேரத்துடிக்கும் இளைஞர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும்
காவல் பணியில் சேர்ந்து கடமை தவறாது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையான மக்கள் சேவையை செய்வோம் எனவும்தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமைக்கு பெருமை சேர்ப்போம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் தனியாக நேரம் ஒதுக்கி இப்படி ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி துடிப்புமிக்க இளைஞர்கள் மத்தியில் வேகத்தையும், விவேகத்தையும், தூண்டிவிட்டு காவல் பணிக்கு வரவேற்பு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மேற்படி இளைஞர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.