திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் கணினி பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இரண்டாம் இடத்தை பிடித்த காவலர் திரு.மு.யு.ஹரிஹரசுதனுக்கு சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், IPS அவர்கள் வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் CBCID காவல்துறை இயக்குநர் திரு. ஜாபர் சேட், IPS ஆகியோர் கலந்து கொண்டு, காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.