தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதன்படி,
- ரயில்வே ஐ.ஜி யாக பணியாற்றி வந்த திரு.சுமித் சரண் ஐபிஎஸ் அவர்கள், ஊர் காவல் படை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக பணியாற்றி வந்த டாக்டர் திரு.ஆர். தினகரன் ஐபிஎஸ் அவர்கள், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆயுதப்படை டிஐஜி திருமதி.கயல்விழி ஐபிஎஸ் சென்னை பயிற்சி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர். ஸ்ரீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்,
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திருமதி.ரவளி பிரியா, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்,
- தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.ஓம்பிரகாஷ் மீனா ஐபிஎஸ், சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சிறப்பு குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.விஜயகுமார், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை பெருநகர காவல் அடையார் மாவட்ட காவல் துணை ஆணையராக இருந்த திரு.விக்ரமன் ஐபிஎஸ், சென்னை சிறப்பு குற்ற பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மெட்ரோ ரயில் காவல் கண்காணிப்பாளராக இருந்த திருமதி.என். தேவராணி ஐபிஎஸ், சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. அருண் பாலகோபாலன், சென்னை பெருநகர காவல் புனித தோமையார் மலை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த திருமதி ஜி.சியாமலா தேவி, சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.