தமிழகத்தில் கூடுதல் டிஜிபியாக உள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ஏடிஜிபி திரு அம்ரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அது துறையில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் காவல்துறை ஆணையர் (ஏடிஜிபி ) திரு .எம். ரவி, ஐபிஎஸ் அதே பொறுப்பில் டிஜிபி பதவி உயர்வு பெற உள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் (ஏடிஜிபி) டாக்டர்.ஜெயந்த் முரளி ஐபிஎஸ் அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
புது டெல்லி காவல்துறை Research & Development பிரிவில் ஏடிஜிபி ஆக உள்ள திரு.கருணாசாகர் ஐபிஎஸ் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.