கிருஷ்ணகிரி: தமிழக காவல்துறை சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதியை “தேசிய ஒற்றுமை தினமாக”கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “சர்தார் வல்லபாய் பட்டேல்”அவர்களின் திருவுருவச்சிலை வரை செல்ல உள்ள தமிழக காவல்துறையின் இருசக்கர வாகன பேரணி 15.10.2021 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி,
நேற்று 16.10.2021 ஆம் தேதி மாலை கிருஷ்ணகிரி வந்தடைந்த பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி IPS
அவர்கள் தலைமையில், திரு.விவேகானந்தன் ADSP அவர்கள் கிருஷ்ணகிரி, திரு.சரவணன் DSP அவர்கள் கிருஷ்ணகிரி, திரு.சுப்பிரமணி DSP அவர்கள்
ஆயுதப்படை கிருஷ்ணகிரி மற்றும் திரு.சரவணன் அவர்கள் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகிரி டவுன் உள்ளிட்டோர் வரவேற்று அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்