சென்னை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 11.09.2021-ம் தேதி கோயம்புத்தூர் விரைவு ரயிலில் திருப்பூரிலிருந்து காட்பாடி வரை பயணம் செய்தார்.
காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கியதும் தனது உடைமைகளை சரி பார்க்கும் போது ரயிலில் தனது நகைப்பையை தவற விட்டது தெரியவந்தது. உடனடியாக காட்பாடி தமிழக இருப்புப்பாதை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்,
அதன் பேரில் அந்த வழிதடத்தில் உள்ள அனைத்து இருப்புப்பாதை காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை பெற்ற பெரம்பூர் தமிழக இருப்புப்பாதை பெண் உதவி ஆய்வாளர் திருமதி.ராமுதாய் மற்றும் காவலர் திரு.தேவேந்திரன் ஆகியோர் இரயில் பெட்டியில் சோதனை செய்து நகைப்பையை மீட்டு அந்நபரை வரவழைத்து உரிய விசாரணைக்கு பின் ஒப்படைத்தனர்.
தனது நகைப்பையை மீட்டுக்கொடுத்த தமிழக இருப்புப்பாதை காவல்துறையினருக்கு மனமகிழ நன்றியை தெரிவித்து சென்றார்.