திருநெல்வேலி : முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணண், இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பாதுகாப்பு நலன் கருதி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு பணியில் ஈடுபடும் படி அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் அனைத்து காவலர்களும் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் இரண்டாவது தடுப்பூசி குறிப்பிட்ட நாளில் போடும்படி அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்று 26.04.2021 மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பு மையத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் முன்களப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்கள்.