திருநெல்வேலி : காவல் ஆளினர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் 2 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்களை தமிழக அரசு திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் 24.02.2022 இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை நேரில் சென்று பார்வையிட்டு, மேற்படி உடற்பயிற்சி உபகரணங்களை அனைத்து காவலர்களும் பயன்படுத்தி தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.சுப்பிரமணியன் அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படையில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆயுதப்படை அலுவலகத்தை பார்வையிட்டார்.