தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.மணிவேல் மேற்பார்வையில்.
தஞ்சை தனிப்படை போலீசார்கள் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன், தலைமை காவலர் திரு.உமாசங்கர் மற்றும் காவலர்கள் திரு.அருண்மொழி, திரு.அழகுசுந்தரம், திரு.நவீன், திரு.சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார்கள் தினசரி தஞ்சை டவுன் மற்றும் புறப்பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 17-11-21 அன்று தனிப்படை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தஞ்சை தனிப்படை போலீசார் நேற்று தஞ்சை புறநகர் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார்கள். அப்போது.
அவ்வழியாக இரு பல்சர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த நான்கு நபர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்களின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தார்கள்.
அதில் சுமார் 72 – பவுன் நகைகளும், இரண்டு லட்சம் ரொக்கமும் மற்றும் இரண்டு இரும்பு ராடுகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார்கள் உடனே அந்த நான்கு நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
அதில் அந்த நான்கு நபர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை,பட்டுக்கோட்டை , தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பகல் நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் கும்பல் எனவும் .
இவர்கள் மீது வங்கிகளில் கொள்ளையடித்த வழக்குகளும் நிலுவையில் உள்ளதும், கடந்த இரண்டு வருடங்களாக இக் குற்ற செயல்களை செய்து வந்துள்ளார்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இக் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் மூளையாக செயல்பட்டவன் சேலம் ,ஓமலூர் அம்மன் நகரில் வசித்து வரும் பால் ஜோக்கப் மகன் மனேஜ் 35. மற்றும் அவனது கூட்டாளிகள் சிவகங்கை கீழடி மேலத்தெருவில் வசித்து வரும் கண்ணன் மகன்கள் ராஜராமன் 26. கார்த்திக் ராஜ 24. திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் விருமாண்டி மகன் திலீப் திவாகர் 26. ஆகியோர் ஆவார்கள்.
மேலும் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியிலுள்ள உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கிட்டத்தட்ட 42 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 5000 ரொக்கம் கொள்ளையடித்து விட்டு தஞ்சை பகுதிக்கு நேற்று வந்த போது எதிர்பாராத விதமாக போலீசாரிடம் சிக்கினார்கள் என்பது குறிப்பிட தக்கதாகும்
பிடிபட்ட கொள்ளை கும்பலை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.