சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 77வது சுதந்திரத் தினத்தையொட்டி துணிச்சலாக செயல்படுதல் மற்றும் மெச்சத்தக்க வகையில் செயல்படும் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
துணிச்சலாக செயல்பட்டதற்காக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெச்சத்தக்க வகையில் செயல்பட்டதற்காக சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனர் அரவிந்த், தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஏசுபாதம், ராமநாதபுரம் எஸ்பி தங்கத்துரை, உதவி கமிஷனர் ஆனந்தராமன், டிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் கூடுதல் எஸ்பி மதியழகன், தஞ்சை டிஎஸ்பி ராஜூ, சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனர் சங்கரலிங்கம், திருச்சி நகர இன்ஸ்பெக்டர் இளங்கோவன்ஜென்னிங்க்ஸ், திருச்சி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சிவா ஆனந்த், திருமலைக்கொழுந்து, உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துமாலை, கோவை நகர இன்ஸ்பெக்டர் புகழ்மாறன், சென்னையைச் சேர்ந்த எஸ்.ஐ. மாரியப்பன், சென்னை நகர இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்.ஐ.தனபாலன், எஸ்.ஐ.செண்பகவள்ளி ஆகிய 21 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் சுதந்திர தினம் விழாவில் இவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
A. சுனில் குமார்